இந்தியன் 2 வில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ! ப்ரியா பவானி சங்கர் !

சினி நியூஸ் சினிமா

pbs - 2026செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ப்ரியா பவானி சங்கர். அடுத்ததாக இவர், சின்னத் திரையில் கவனம் செலுத்தினார். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத் திரை சீரியலில் நடித்தார்.

அதையடுத்து, அவர் ரொம்பவும் பிரபலமாகிவிட, அடுத்ததாக அவருக்கு சினிமா சான்ஸ் வந்தது.மேயாத மான் என்ற படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற, ப்ரியாவின் கிராப்பும் உயரத் துவங்கியது. தொடர்ந்து, கடைக்குட்டிச் சிங்கம் என்ற படத்திலும் நடித்தார். அதுவும் வெற்றி பெற்று விட, அவருக்கென தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்தார்; அந்தப் படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனால்  சிறந்த நடிகை என்று எஸ் ஜே சூர்யா புகழ்ந்து பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவா, அருள்நிதி ஆகியோர் நடிக்கும் படங்களில், ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ப்ரியா பவானி சங்கர்,தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.pbs1 - 2026ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கமல் ஹாஸன் படத்தில் நடிப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் ப்ரியா. படம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

நான் ஷங்கர் சார் அலுவலகத்திற்கு சென்றேன். 2 மணிநேரம் கதை சொன்னார்கள். என் கதாபாத்திரம் குறித்து தெரிந்த பிறகு அசந்து போய்விட்டேன். ஹீரோயின்களில் நானும் ஒருவர். உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கர் சார் இயக்கத்தில் கமல் சார், சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பது ஆசிர்வாதம் என்கிறார் ப்ரியா. அவரின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் என்று கூறப்படுகிறது.

இது தவிர்த்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் விக்ரம் 54 படத்தில் சீயானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ப்ரியா. அடுத்தடுத்து அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார்.

சின்னத்திரையில் இருந்தபோதே ப்ரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். பெரிய திரைக்கு வந்ததும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.