ஓசூரில் ஹெல்மெட் விழிப்பு உணர்வுப் பேரணி!

Published:

hosur perani twowheeler - 2026

ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது!

இந்தப் பேரணி ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு துவங்கி ரயில் நிலையம் சாலை, ஓசூர் அரசு மருத்துவமனை சாலை , காமராஜர் காலனி உள்ளிட்ட நகர முக்கிய சாலை வழியாக வந்து அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நிறைவு செய்ய பட்டது!

இந்தப் பேரணியில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமுரத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரனிதரன், ஓசூர் நகர காவல் ஆய்வாளர் லக்ஷ்மன் தாஸ், உதவி காவல் ஆய்வாளர்கள் சரவணன், நௌசாத், சிரஞ்சீவி, போக்குவரத்து போலீசார், மற்றும் ஓசூர் திவ்யா , செலக்‌ஷன் வித்யா,உள்ளிட்ட பல்வேறு ஓட்டுநர் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img