பொடி வைத்து ரஜினியை கார்னர் செய்யும் கோமாளி !

Published:

ravi 1 1 - 2026நடிகர் ஜெயம் ரவி நடித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருக்கும் ஐசரி கணேஷின் சொந்தப் படம் கோமாளி. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனுக்காக சமீபத்தில் டிரைலர் வெளியானது.

அதில், கோமாளி படத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக் கொண்டே போவதை கிண்டல் செய்வது போல காட்சிகள்  இருப்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.rajni komali - 2026இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும், கோமாளி படக்குழுவுக்கு எதிராக கொந்தளித்தனர். நடிகர் கமலும், கொந்தளித்தார். படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை போன் மூலம் தொடர்பு கொண்டு இதையெல்லாம் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என தன்னுடைய கருத்தை அவரிடம் பதிவு செய்தார்.

இதையடுத்து, அப்படிப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்தால், அதை நீக்கச் சொல்லி விடுகிறேன் என, ஐசரி கணேஷ், நடிகர் கமலுக்கு உறுதி தெரிவித்ததோடு மட்டுமல்லாது அதையே, வீடியோ பதிவாகவும் வெளியிட்டார்.komali - 2026கோமாளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள், ரஜினியை மேலும் சீண்டும் விதமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம் பெறும் ஒளியும் ஒலியும் பாடலில், சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிடுச்சு. இப்போ, பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு என்று வரிகள் இடம் பெற்றுள்ளன.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

நடிகர் ரஜினி, தன்னுடைய பேத்தி வயதில் இருக்கும் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை கிண்டல் செய்வது போலவே, இப்பாடல் வரிகள் அமைந்திருப்பதால், ரஜினி ரசிகர்களை, படத்துக்கு எதிராக தொடர்ந்து கிளப்பி விட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் என்னன்னவெல்லாம் ரஜினிக்கு எதிராக படத்தில் இடம்பெற்றிருக்கிறதோ என்றும், ரஜினி ரசிகர்கள் ஐயப்படத் துவங்கி இருக்கின்றனர்.

கோமாளியில்- ஒளியும் ஒலியும் பாடல் வரிகள்….. 

ஒரு ஒளியும் ஒலியும் பாக்க
அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ channel ah மாத்தி மாத்தியே
நம்ம உறவு அந்துடுச்சே
Super star’u ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே
ஜவ்வு மிட்டாய் watch கட்டி
காலம் போச்சு அன்னைக்கு
BP sugar’ah வாட்ச்சில் பார்த்து
வாழ்க்க போச்சு இன்னைக்கு
எம்மதமும் சம்மதம்ன்னு
சொல்லி தந்தியே
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே
கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாளா கோர்த்துவிட்டியே
தகுதி இல்லா தருதலைக்கும்
திமிரு இருக்குது
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா
ஒடம்பு வலிக்குது
நாடார் கடை நாயர் கடை
எல்லா இடத்திலும்
நாகலாந்தும் மிசோரமும்
வேல செய்யுதே
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி
நான் எங்க இருக்கேன்
எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சா
யாரோட ஆட்சி
ஒரு ஒளியும்… 

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img