அத்திவரதர் வைபவம்… காஞ்சியில் 3 நாள் அரசு விடுமுறை! பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து 9 நாட்கள் ரெஸ்ட்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanchipuram athivarathar - 2026 அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 3 நாள்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் சயனக் கோலத்திலும் தொடர்ந்து ஆக. 1ம் தேதி முதல் நின்ற நிலையிலும் தரிசனம் அளித்து வருகிறார். சயனக் கோலத்தில் பெருமாளை தரிசிக்க வந்தவர்களை விட நின்ற கோலத்தில் காட்சி தரும் வரதராசப் பெருமாளை தரிசிக்க ஒவ்வொரு நாளும் அன்பர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அருகில் உள்ள ஊர்களில் இருந்து மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள், முதல் நாள் நள்ளிரவே கோயில் பகுதியில் வரிசையில் நின்று விடுகின்றனர். அதிகாலை கோயில் திறந்ததும் அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் முண்டியடித்துச் செல்கின்றனர்.

அத்திவரதர் வைபவத்துக்கு இவ்வளவு அதிக அளவில் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் திட்டமிடலும் இல்லாததால், மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் பிரச்னையை சந்தித்து வருகின்றன.

kanchipuram athivarathar4 - 2026ஒவ்வொரு நாளும், கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு செல்வதால், பக்தர்கள் சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. நெரிசல், துர்நாற்றம், வியர்வை என சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் பக்தர்கள்! இருந்த போதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதுவும் 48 நாட்கள் தான் என்பதால், அத்திவரதரை தரிசிக்கும் ஆர்வம் மட்டும் அன்பர்களிடம் குறையவே இல்லை.

பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப் படுகிறது.

இதனிடையே காஞ்சிபுரம் நகரில் மட்டும் பள்ளிகள் கடந்த ஜூலை 1ஆம் முதல், ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்திவரதர் வைபவம் நிறைவுறப் போகும் நிலையில், இன்னும் 10 நாட்களே உள்ளதால், கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

kanchipuram athivarathar1 - 2026இந்தச் சூழலில் உள்ளூர் மக்கள் அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொள்ள வசதியாகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் ஆகஸ்ட் 13,14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 13,14,16ஆம் தேதிகளில் காஞ்சி நகர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆக.12 ஆம் தேதி பக்ரீத், ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினம், ஆக.17 சனிக்கிழமை, ஆக.18 ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவாரம் முழுதும் விடுமுறைதான் என்று ஆகியிருக்கிறது காஞ்சிபுரத்துக்கு! இதனால், காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஆக.10 சனிக்கிழமை தொடங்கி, மறு வாரம் ஞாயிறு (ஆக.18) வரை 9 நாள்களுக்கு தொடர் விடுமுறைதான்!

kanchipuram athivarathar3 - 2026இந்நிலையில், அத்தி வரதர் விழா வரும் ஆக.17ஆம் தேதி சனிக்கிழமை நிறைவு பெறுகிறது. அன்று மதியம் 12 மணியுடன் கிழக்கு கோபுர வாசல் மூடப் படும் என்றும், அதன் பின்னர் உள்ளே இருக்கும் அன்பர்கள் அத்திவரதரை தரிசித்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் அன்று இரவுக்குள் அத்திவரதர் திருமேனியை மீண்டும் குளத்தினுள் எழுந்தருளச் செய்ய ஏற்பாடுகள் நடைபெறும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
அத்திவரதர் தொடர்பான புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார், ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

kanchipuram athivarathar2 - 2026வரும் 13, 14, 16 ஆகிய நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

பக்தர்கள் வரும் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.