மிஸ்டர் செட்டியார்.. ரஜினிக்கு பாடம் எடுக்கற அளவுக்கு நீங்க புத்திசாலி இல்லை..!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்

rajini karthi - 2026

மிஸ்டர் செட்டியார்.. ரஜினிக்கு பாடம் எடுக்கற அளவுக்கு நீங்க புத்திசாலி இல்லை..

சென்னையில் நேற்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரம் குறித்தும் கருத்தை தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சினையில் அமித்ஷா மோடி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும் அமித்ஷாவின் நாடாளுமன்ற பேச்சு மிகவும் அருமையாக இருந்ததாகவும் பாராட்டி பேசினார்.

நடிகர் ரஜினிகாந்தின் காஷ்மீர் குறித்த பேச்சுக்கு தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்களான சினிமா நடிகர்கள், திரைத்துறையினர், காங்கிரஸ் மற்றும் திமுக மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்பிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் ரஜினியின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக வாய்தா மேல் வாய்தா வாங்கி, தில்லி நீதிமன்றத்தால் கைதுத் தடை தீர்ப்புகளை பெற்றுக் கொண்டு சிவகங்கை வேட்பாளராக நின்று போட்டியிட்டு வென்ற கார்த்தி சிதம்பரம் தனது கருத்தை ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.

ரஜினிகாந்த் குறித்து ஒரு கட்டுரையை குறிப்பிட்டு காஷ்மீரின் வரலாற்றைப் படியுங்கள் என்று ரஜினிகாந்துக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரத்தை பிரித்து மேய்ந்து வருகின்றனர் பலர். அவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து தான் இது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.