
முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ஹா ராவு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஓராண்டிற்கு விமரிசையாக ஏற்பாடு செய்யப் போவதாக தெலங்காணா முதல்வர் கே சந்திரசேகர ராவு தெரிவித்துள்ளார். பிவி பிறந்தநாளான ஜூன் 28 லிருந்து இந்த கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக, சுதந்திர போராட்ட வீரராக, கல்வி அறிஞராக, எழுத்தாளராக பிவி நரசிம்மராவு நாட்டிற்கு பலவிதங்களில் சேவை செய்துள்ளார் என்று கேசிஆர் கூறினார்.
அத்தனை சிறந்த மனிதர் தெலங்காணாவைச் சேர்ந்தவர் என்பது மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் பெருமைக்குரியது என்று முதல்வர் தெரிவித்தார். பிவியின் சேவைகளை நினைவுகூர்வதற்கு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தீர்மானித்துள்ளதாக கேசிஆர் குறிப்பிட்டார்.
பிவியால் நமக்குப் பெருமை என்று சிறப்பாக கூறிக் கொள்ளும் விதமாக உற்சவங்களை செய்வோம் என்றார்.
பி வி நரசிம்மராவ் நூற்றாண்டுவிழா உற்சவங்களின் ஏற்பாட்டிற்காக பார்லிமென்டரி சீனியர் அங்கத்தினர் கே கேசவ ராவ் தலைமையில் கமிட்டி நியமித்துள்ளார். அரசாங்க முக்கிய ஆலோசகர் ராஜீவ் சர்மா, பிவி புதல்வர் பிவி பிரபாகர் ராவு, மகள் வாணி தேவி, கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஈட்டல ராஜேந்தர், கே டி ராமாராவ், அதிகார பாஷா சங்கம் உறுப்பினர் தேவுலபல்லி பிரபாகர் ராவு, மத்திய சாகித்ய அகாடமி அவார்டு வாங்கிய அம்ப சய்ய நவீன் இந்த கமிட்டியில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இன்னும் ஆறு ஏழு பேரை கூட கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்ற கேசவராவிடம் கேசிஆர் கோரினார்.

பிவியோடு சேர்ந்து பணிபுரிந்தவர்கள், அவரோடு தொடர்புடையவர்கள், குடும்பத்தினர்கள், அவருடைய அபிமானிகள் முதலானோரை தொடர்புகொண்டு விழா ஏற்பாட்டிற்கு தொடர்புடைய நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்று முதல்வர் கேசிஆர் கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுகாலம் தொடர இருக்கும் இந்த விழா கொண்டாட்டங்கள் ஹைதராபாத் உசேன் சாகர் ஏரிக் கரையில் இருக்கும் நெக்லஸ் ரோடு பிவி ஞான பூமி எனப்படும் பிவி காட் டில் ஜூன் 28 தொடங்கவுள்ளது.
தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிவி நரசிம்மராவின் நினைவுகளுக்கு தகுந்த கௌரவம் அளிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அரசியல் மேதை பாமுலபர்த்தி வெங்கட நரசிம்மராவ் என்று புகழாரம் சூட்டினார் கேசிஆர் .
சில குழுக்கள் பிவியை பாபர் மசூதி இடிப்போடு தொடர்புபடுத்தி குறை கூறினாலும் தெலங்காணா மக்கள் பிவியை மண்ணின் மைந்தர் ஆக நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்த பெருமைக்குரிய தலைவராகவே பார்க்கின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து வந்த முதல் பிரதமர் பிவி.

பிவிக்கு பாரதரத்னா அளித்து கௌரவிக்கும்படி தெலங்காணா அரசு பிரதமர் மோடி அரசுக்கு விண்ணப்பிக்க உள்ளது. கோவிட் 19 பயமுறுத்தல் இருந்தாலும் முதல்வர் கேசிஆர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளார்.
பிவியின் புதல்வர் பிரபாகர் ராவ், மகள் வாணி யோடு உரையாடிய போது முதல்வர் கேசிஆர் ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமுக்கு இருப்பதுபோல் பிவிக்கு மெமோரியல் அமைக்கப் போவதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி பிவி உயிருடன் இருந்தபோதும் சரி அவர் காலமான பின்பும் சரி அவரை குறை கூறிக் கொண்டே இருந்தது. காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தபோது டெல்லியில் பிவி மரணமடைந்தாலும் அவர் உடலை ஹைதராபாத் எடுத்துவந்து அந்திம கிரியை நடத்த வேண்டி வந்தது. அவருக்கு நாட்டின் தலைநகரில் மெமோரியல் இல்லை.
கேசிஆர் அரசாங்கம் பிவியின் வெண்கல சிலையை டெல்லி தெலங்காணா பவனில் அமைப்பதோடு பார்லிமென்டில் அவர் படத்தையும் நிறுவ இருக்கிறது. பிவி பிறந்த கரீம்நகர் வங்கரா கிராமத்திலும் அவர் சிலையை நிறுவ போகிறார் கேசிஆர்.
அதேபோல் இந்த ஆண்டு பல இடங்களில் பிவி போட்டோ கண்காட்சி நடத்த உள்ளார். முதல்வர் கேசிஆர் முதல் தவணையில் இந்த சென்டினெரி செலிப்ரேஷனுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். மதவாதக் கட்சி மஜ்லிஸ் பசாவோ தெஹிரிக் (mbt) இந்த விழா குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.



