girl child
girl child

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மும்பை நகரம் தத்தளித்து வருகிறது.

நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் ஒன்றான மும்பையில் கரோனா பாசிட்டிவ் கேசுகள் மிக மிக அதிகமாக பதிவாகி வருகின்றன. மும்பையில் மட்டுமே 58226 பாசிடிவ் கேசுகள் பதிவாகி உள்ளன.

அதோடு நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் கூட கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். அவர்களைக் கூட ஐசொலேஷன் வார்டில் இருத்தி மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கர்பிணிகளில் பலருக்கும் சுகப்பிரசவம் ஆகியுள்ளது. சிலருக்கு சிசேரியன் கூட ஆகியுயுள்ளது.

பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு கரோனா வராது என்று தெரிந்ததால் குழந்தைகளின் பெற்றோர் ஆனந்தத்தில் உள்ளனர்.

ப்ரஹத் மும்பை கார்ப்பரேஷன் தலைமையில் நடந்து வரும் பிஒய்எல் நாயர் ஹாஸ்பிடலில் கரோனா வியாதி தாக்குதலில் விழுந்த 300 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அழகான குழந்தைகளை ஈன்றுள்ளார்கள்.

இவர்களில் பலர் சுகப்பிரசவத்தில் குழந்தைகளை ஈன்று உள்ளார்கள். ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 டெலிவரிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரலில் நாயர் மருத்துவமனையை கோவிட் மருத்துவ மனையாக மாற்றி உள்ளார்கள்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கரோனா பாதித்தவர்களுக்காக 120 படுக்கைகளுடன் கூடிய ஐசொலேஷன் வார்டுகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஞாயிறு வரை 302 பேர் கரோனா கர்பிணிகள் டெலிவரி ஆகி உள்ளார்கள். தாயிடமிருந்து குழந்தைக்கு கரோனா வைரஸ் வராது என்று மருத்துவர்கள் தீர்மானமாக கூறியுள்ளார்கள்.

189 பேர் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடந்தது. 113 பேருக்கு சிசேரியன் பிரசவம் செய்துள்ளார்கள். இதுவரை 254 பேர் தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்கள்.

நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 504 பாசிடிவ் கேசுகள் பதிவாகியுள்ளன. 5757 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையோடு கூட தானே, புநே, ஔரங்காபாது, பால்கார் இடங்களில் கரோனா பாசிடிவ் கேசுகள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending