ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs பஞ்சாப் – புதிய சண்டிகர் – ஏப்ரல் 11 – முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய ஹைதராபாத் அணி சிறப்பாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 219 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 74 ரன் (5 ஃபோர், 8 சிக்சர்) அடித்தார். அவருக்குப் பின் வந்த ட்ராவிஸ் ஹெட் (23 பந்துகளில் 38 ரன்), இஷான் கிஷன் (17 பந்துகளில் 27 ரன்) கிளாசன் (33 பந்துகளில் 39 ரன்), அனிகேத் வர்மா (9 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 219க்கு உயர்த்தினர். இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (20 பந்துகலில் 57 ரன்) மற்றும் ப்ரிப்சிம்ரன் சிங் (25 பந்துகளில் 51 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தனர். பின்னர் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (33 பந்துகளில் 69 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிராடியாக ஆடியதால் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 223 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஹைதரபாத் அணியின் ஷிவாங் குமார் 3 விக்கட்டுகள் எடுத்தார்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

பதினெட்டாவது ஆட்டம் சென்னை vs டெல்லி – சென்னை – ஏப்ரல் 11 – இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்தது. இந்த பெரிய ஸ்கோர் அந்த அணிக்கு முதல் வேற்றியை இன்று பெற்றுத்தந்தது. சென்னை அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன் அடித்தார். அதி 15 ஃபோர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ருதுராஜ் கெய்க்வாட் (18 ரன்), ஆயுஷ் மாத்ரே (36 பந்துகளில் 59 ரன், 3 ஃபோர், 4 சிக்சர், ரிடயர்ட் அவுட்), ஷிவம் துபே (10 பந்துகளில் 20 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் பதுன் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன்), கே.எல். ராகுல் (10 பந்துகளில் 18 ரன்), சமீர் ரிஸ்வி (6 ரன்), அக்சர் படேல் (1 ரன்), டேவிட் மில்லர் (17 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (38 பந்துகளில் 60 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (19 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஆயினும் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணியின் ஜமி ஓவர்டன் 4 விக்கட்டுகளும் அன்ஷுல் காம்போஜ் 3 விக்கட்டுகளும் எடுத்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பத்தொன்பதாவது ஆட்டம் லக்னோ vs குஜராத் – லக்னோ – ஏப்ரல் 12 – முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. அந்த அணியின் எந்த மட்டையாளரும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. அந்த அணியின் எட்டு மட்டையாளர்கள் இரட்டை இலக்க ரன் சேர்த்தனர் ஆனால் 20 ரன்னுக்குக் குறைவாக. எய்டன் மர்க்ரம் 30 ரன் அடித்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கட் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் ஷுப்மன் கில் (40 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 60 ரன், 11 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடினர். அதனால் குஜராத் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபதாவது ஆட்டம் பெங்களூரு vs மும்பை – மும்பை வான் கடே மைதானம் – ஏப்ரல் 12 – இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஃபில் சால்ட் (36 பந்துகளில் 78 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் விராட் கோலி (38 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் ஆடவந்த ரஜத் படிதர் (20 பந்துகலில் 53 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அதன் பின்னர் டிம் டேவிட் (16 பந்துகளில் 34 ரன்) ஜித்தேஷ் ஷர்மா (9 பந்துகளில் 10 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியதால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 240 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் வரிசை சொதப்பியது. ரன் ரேட்டை அதிக அளவில் வைத்திருப்பதற்காக தேவையில்லாத ஷாட்டுகள் விளையாடி அந்த அணியின் மட்டையாளர்கள் விக்கட்டுகளை வேகமாக இழந்தனர். ரூதர்ஃபோர்ட் (71 ரன்), ஹார்திக் பாண்ட்யா (40 ரன்), ரியன் ரிக்கிள்டன் (37 ரன்), சூர்யகுமார் யாதவ் (33 ரன்), ரோஹித் ஷர்மா (19 ரன்) ஆகியோர் வேகமாக ரன் எடுத்தும் நிலையாக ஆடாததனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 222 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories