பிப்ரவரி 24, 2021, 11:10 மணி புதன்கிழமை
More

  தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!

  Home ஆன்மிகம் தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!

  தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!

  abinav vidhya theerthar

  செல்வம் நமக்கு பெரிய சுகத்தை கொடுக்கும் என்றும் அதனால் நமது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு விடலாம் என்று மக்கள் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தை சேர்ப்பதற்காக ஒருவன் அதர்ம வழியில் செல்வதற்கு சிறிதும் தயங்குவதில்லை. அரசாங்கத்திற்கு சேரவேண்டிய பணத்தை கொடுக்க கூட மனம் வருவதில்லை. இதனால் கள்ள கணக்குகளை அவன் தயார் செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை பிடிபட்டாலும் லஞ்சம் கொடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். எப்படியாவது பணத்தை கோடி கோடியாக சேர்த்து விட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அப்படி சம்பாதித்த பணத்தை எங்கே எடுத்து வைப்பது என்பது அவனுக்கு பெரிய பிரச்சினையாகி விடுகிறது. அதை ஒரு பெட்டியில் வைத்து ஆக வேண்டியுள்ளது. அந்த பெட்டியை பூட்டுப் போட்டு வைத்திருக்க வேண்டும். பெட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும்.

  பூஜைகள் செய்யும் பொழுது தியானம் செய்யும் பொழுது கோயிலில் இருக்கும் பொழுது என எப்போதும் அவன் நினைவு அந்த பெட்டியிலேயே இருக்கிறது. எப்பொழுதுதான் அந்தப் பெட்டியிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும். அவன் உடலை விட்டு உயிர் பிரியும் போதுதான் அவனுக்கு விடுதலை கிடைக்கும்.

  இப்படி கஷ்டப்பட்டு பேராசையுடன் சேர்த்த பாதுகாத்த செல்வமானது மற்றொருவர் கைக்கு இவனை அறியாமலேயே சென்றுவிடுகிறது. இப்படி சேர்த்த செல்வத்தை தன்னுடைய மறு உலகிற்கு கொண்டு செல்ல பெரிதும் விரும்புவார்.

  எப்படியோ பணத்தை சேர்த்து விட்டேன் இது வரை அதை வைத்து கொண்டு இருந்தேன் நான் அதை இழக்க விரும்பவில்லை என்றால் என் தலையில் வைத்துக்கொண்டு அதை உடனே கொண்டு செல்ல ஆசைப்படுகிறேன். என்று நினைத்திருப்பான். நகைச்சுவையுடன் கூடிய உபதேசத்தை அளித்திருக்கிறார் இறந்தபிறகு உன்னுடன் கொண்டு செல்ல விரும்பினால் உயிருடன் இருக்கும் பொழுது நல்ல தகுதிவாய்ந்த ஒருவனுக்கு அதனை செய்துவிடு அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா அந்த செல்வம் புண்ணியமாக மாறிவிடும். தலை என்று ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த செல்வமானது புண்ணிய வடிவில் உன்னுடன் வருவது உறுதி என்று கூறியுள்ளார். தகுதி வாய்ந்த ஒருவருக்குக் கொடுக்கும் தானமானது பேராசையாகிய நோய்க்கு சிறந்த மாற்று மருந்து என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  தானம் பெறுபவர்கள் தானத்தினால் சந்தோஷத்தை அடைவது மட்டுமின்றி தானத்தை கொடுத்தவர்களும் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவார்கள். ஒருவன் பணத்தைத் தொலைத்து விட்டால் மனவருத்தத்தை அடைகிறான். ஆனால் அதே பணத்தை அவனாகவே பரீட்சைக் கட்டணம் செலுத்த முடியாத ஒரு ஏழைப் பள்ளி மாணவனுக்கு கொடுத்தால் அவன் அப்பொழுது வருத்தப்படாமல் சந்தோஷப்படுவான். அதனால்தான் அது அதை வாங்கி கொள்பவர்களை மட்டுமின்றி கொடுப்பவர்களையும் மகிழ்ச்சியில் திளைத்து செய்கிறது.