ஏப்ரல் 19, 2021, 2:23 காலை திங்கட்கிழமை
More

  மஹாபரணி: இன்று செய்யும் தானம்.. சகலதோஷ நிவாரணம்!

  dharpanam

  07-09-2020 – திங்கள் – மஹாபரணி -/மோக்ஷதீபம்.

  தற்போது மஹாளய பக்ஷத்தில் வருகிற 2020 செப்டம்பர் 7-ம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி பரணி நக்ஷத்திர நாள் மஹாபரணி எனச் சொல்லப்படுகிறது.

  கோள்களில் சனிஸ்வர பகவானின் அதிபதியான யமனுக்குகந்த பொழுது. பொதுவாக மஹாபரணியிலும் தீபாவளிக்கு முந்தைய நாளும் யமதீபமேற்றி யமதர்மராஜனைப் போற்றி அபஸ்மாரம் வாராமல் காத்துக் கொள்ள ப்ரார்த்தித்து யமதீபம் ஏற்றுவர்.

  மஹாபரணி அன்று காலையிலோ அல்லது சந்தி வேளையிலோ நம் வீட்டு பூஜையறையிலேயே ஒரு பலகையில் கோலமிட்டு அதன் மேல் ஓர் தனி அகலில் நெய் தீபமேற்றி பித்ரூக்களுக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டி ப்ரார்த்திப்பது நல்ல பலனைத் தரும் என்கிறார்கள் பெரியோர்கள்.

  நம் குலத்து பித்ரூக்கள் மட்டுமின்றி லோக பித்ரூக்கள் எல்லோருக்குமாக ப்ரார்த்தித்துக் கொண்டு தீபமேற்றி, எள், வெல்லம், நெய் கலந்த சாதம் நைவேத்யம் செய்து (காலை வேலையில்) காகத்துக்கும் அன்னமிட்டு வழிபட பித்ருக்கள் ப்ரீதி அடைவார்கள். விவாஹத் தடை, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, கல்வி மேன்மை, யமபயம் நீங்கி ஆயுள் வ்ருத்தி உண்டாக்கும்.

  எள்ளை நன்றாக அலம்பி சற்று உலர வைத்துவிட்டு, லேசாக சூடுபடுத்திக் கொண்டு, அத்துடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவுக்கு வெல்லம் சேர்த்துக்கொண்டு அரைத்து பொடிசெய்து, ஒரு பாத்திரத்தில் நெய்யூற்றி சாதமிட்டு அதனுடன் இந்த எள்ளுப்பொடியைக் கலந்து எள்சாதமாக்கி அதனை நைவேத்யம் செய்வர் என அறியமுடிகிறது.

  given

  இங்கே பித்ரு ஸ்துதியை பகிர்ந்துள்ளேன். இது ஓர் ஸ்துதியாக இருப்பதால் அனைவரும் சொல்லலாம். குல பித்ருக்கள் ப்ரீதி அடைந்து அவர்களுடைய ஆசிகளிலே எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும்.

  பித்ரு ஸ்துதி:

  ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்

  ஸ்ரீ பிரம்மா உவாச

  ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
  ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

  ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
  ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

  நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
  ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

  துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
  ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

  தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
  மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

  யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
  அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:

  பல ஸ்ருதி

  இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
  ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச

  ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
  ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

  நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
  ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்

  பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி

  எல்லாம் வல்ல தேவாதி தேவர்களும் ஒன்றடங்கிய கோமாதாவுக்கு ஆஹாரம் தருவதும் நற்சிறப்பை உண்டாக்கும். இயன்றளவு பசுவுக்கான தானித்தையோ கீரை வகைகளையோ வாங்கித் தாருங்கள். பசியோடிருப்பவர்களுக்கு உண்ண உணவு அளியுங்கள். அல்லது உணவுக்கென உங்களால் இயன்ற பணத்தை கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். பக்ஷிகளுக்கு தானியமிடுங்கள்.

  லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து:

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »