
பால் டம்ளர் – தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு
நூலாசிரியர் (மொழிபெயர்ப்பு) : ராஜி ரகுநாதன்
பக்கம்: 232
விலை: ரூ.150/-
வெளியீடு: கனவு வெளியீடு, திருப்பூர் – 641602.
தொடர்புக்கு: +91 98490 63617
துர்கா ஜானகிராணி, வாரணாசி நாகலட்சுமி, முக்தேவி பாரதி, ஜ்யோதி வலபோஜு, பத்மலதா ஜெயராம் நந்திராஜு, பொத்தூரி விஜயலட்சுமி, ஷோபா குரஜாட பெரிந்தேவி உள்ளிட்ட ஏழு பெண் எழுத்தாளர்கள் எழுதிய 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
இந்தத் தொகுப்பின் தலைப்பில் இடம்பெற்ற சிறுகதை “பால் டம்ளர்’. இந்தக் கதையில் வரும் (சொரூப) ராணி ஒரு வேலைக்காரச் சிறுமி. அவளுக்கு எஜமானி டீ தருகிறாள். ராணி அதை மறுத்து பால் கேட்கிறாள். “வேலைக்காரிக்கு பால் தருவதா?’ என்று எஜமானி யோசிக்கிறாள். ஆனால் பால் குடிப்பதற்கான காரணத்தை அவள் கூறுவது கேட்டு எஜமானியம்மாள் அதிர்கிறாள். ராணி பள்ளிக்குச் சென்ற பின், அடுத்து வந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எஜமானி வலிய வந்து பால் கொடுக்கிறாள். ஆனால் அவள் “வேண்டாம்’ என்று மறுப்பது இந்தக் கதையின் சுவையான திருப்பம். அதற்கான காரணம் என்ன?! கதை அந்த மெல்லிய உணர்வைப் பதிய வைக்கிறது.
“இப்படியும் ஒரு அன்னை’ “விடிவெள்ளி முளைத்தது’, “ஆபத்துக்கு பாவமில்லையா?’, “காதில் விழாத ராகம்’, “எரிமலைச் சாம்பல்கள்’ என இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பிரச்னைகளை வாழ்க்கையின் ஓட்டத்துடனே பதியவைக்கின்றன. சிறுகதை வாசிப்பாளர்களுக்கு சுவையான விருந்து.

