ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!

Published:

dakshinamurthi - 2026

அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? என்ன பரிகாரம்…

சுருக்கமாக சொல்லப் போனால்…

மேஷ ராசிக்கு இது அஷ்டமத்து குரு. எட்டாம் இடம் என்பதால், மறைவு ஸ்தானம். எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.

ரிஷப ராசியினருக்கு குரு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்துக்குச் செல்கிறார். இதனால் குருவின் பார்வை, குடும்பத்துக்குக் கிடைக்கும். எனவே அதிக நன்மை நடைபெறும்.

மிதுன ராசியினருக்கு ரோக ஸ்தானமான ஆறாம் இடத்துக்கு வருகிறார் குரு. இதனால் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.

கடக ராசியினருக்கு ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். இதனால் குரு வெற்றி தரும் இடத்தில் அமர்கிறார். இதனால் அதிர்ஷ்டம் நன்கு அமையும்.

சிம்ம ராசியினருக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் அமர்கிறார் குரு பகவான். இதனால் நன்மையே ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஜூலை 29 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

கன்னி ராசியினருக்கு மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் அமரும் குருவால் சுமாரான பலன்களே ஏற்படும்.

துலா ராசியினருக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால் லாபம் ஏற்படும்.

விருச்சிக ராசியினருக்கு ஜென்ம ஸ்தானமான முதல் இடத்தில் அமரும் குருவால் சுமாரான பலன்களே கிடைக்கும்.

தனுசு ராசியினருக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்கும். கட்டுக்கடங்காமல் செலவுகள் இருக்கும்.

மகர ராசியினருக்கு லாப ஸ்தானமான பதினோராம் இடத்தில் குரு அமர்கிறார். இதனால் வருமானம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

கும்ப ராசியினருக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார் குரு பகவான். இதனால் நன்மை ஏற்படும்.

மீன ராசியினருக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்துக்கு வருகிறார் குரு பகவான். இதனால் அதிக நன்மை ஏற்படும்.

இந்தக் கட்டத்தில் ராசி, நட்சத்திரம், குருவின் தன்மை, பரிகார விவரங்கள் உள்ளன. அன்பர்கள் பார்த்துத் தெரிந்துகொண்டு வாழ்வில் அனைத்து நலன்களும் பெறும் வகையில் இந்தக் குரு பெயர்ச்சி அமையட்டும் என தமிழ் தினசரி வாழ்த்துகிறது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

gurupeyarchi passmark - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img