பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Published:

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: ஆக.2

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆடி ~ 17 ( 2.8.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆடி மாஸம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ இரவு 10.08 PM வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ இரவு 9.17 PM வரை பூரட்டாதி பின் உத்தரட்டாதி.
யோகம் ~ அதிகண்டம்.
கரணம் ~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~. காலை 6.05.
சந்திராஷ்டமம் ~ மாலை 3.13 PM வரை கடகம் பின் ஸிம்ஹம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்த்தி.
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய (2-8-2026) ராசி பலன்கள்

மேஷம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் மேம்படும்.
கிருத்திகை : ஈர்ப்புகள் ஏற்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.04 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

ரிஷபம்

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.


மிதுனம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணம் முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியால் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : நம்பிக்கை ஏற்படும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


கடகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை ஆட்களிடம் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவுகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். சொத்துப் பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
ஆயில்யம் : முடிவுகள் கிடைக்கும்.


சிம்மம்

செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தொழிலில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாய பணிகளில் அலைச்சல் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


கன்னி

எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுப காரியம் நடைபெறும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : ஆதரவு மேம்படும்.
சித்திரை : திறமை வெளிப்படும்.


துலாம்

விவசாய பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

ALSO READ:  பஞ்சாங்கம் - ஆக.5 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

விசாகம் : போட்டிகள் குறையும்.
அனுஷம் : அனுபவங்கள் ஏற்படும்.
கேட்டை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


தனுசு

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கிய தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : விரயங்கள் ஏற்படும்.
உத்திராடம் : மதிப்புகள் கிடைக்கும்.


மகரம்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : சந்திப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.


கும்பம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். சுபகாரிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : தடைகள் மறையும்.


மீனம்

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2026

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2026

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

Related articles

Recent articles

spot_img