
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – செப்.21
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
புரட்டாசி ~ 4 ( 21.9.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ புரட்டாசி மாஸம் { கன்யா மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 7.45 PM வரை தசமி பின்னர் ஏகாதசி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ உத்தராடம் (முழுவதும்)
யோகம் ~ சோபனம்.
கரணம் ~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to 5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 6.05.
சந்திராஷ்டமம் ~ 11.59 AM வரை ரிஷபம் பின்னர் மிதுனம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ தசமி.
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (21-9-2026) ராசி பலன்கள்
மேஷம்
வியாபாரம் பணிகளில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். மனதை குழப்பிய சிந்தனைகளில் இருந்து சுதந்திரமான சூழ்நிலைகள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : லாபங்கள் மேம்படும்.
பரணி : வலிமை மேம்படும்.
கிருத்திகை : ஆர்வம் மேம்படும்.
ரிஷபம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபகரமான வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : மந்தத்தன்மை அகலும்.
ரோகிணி : நெருக்கம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். மனை விற்பனையில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : ஏற்ற இறக்கமான நாள்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
கடகம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கணவன்-மனைவியிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.
பூசம் : தெளிவு பிறக்கும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
சிம்மம்
தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
கன்னி
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உருவாகும். சேமிப்பு செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : ஆதாயகரமான நாள்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.
துலாம்
பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : அனுபவம் வெளிப்படும்.
சுவாதி : மதிப்பு அதிகரிக்கும்.
விசாகம் : ஆதரவான நாள்.
விருச்சிகம்
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : நிபுணத்துவம் வெளிப்படும்.
தனுசு
பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய செயல்களில் அலைச்சல் உண்டாகும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். உணவு துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : அலைச்சல் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
மகரம்
வியாபார பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். துணைவரைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : சோர்வுகள் நீங்கும்.
அவிட்டம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
கும்பம்
மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் பணியைச் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
மீனம்
தன வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அறிமுகங்கள் ஏற்படும்.
ரேவதி : சாதகமான நாள்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!



Leave a Reply