பஞ்சாங்கம் ஆக.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

Published:

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஆக.14 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆடி ~ 29 ( 14.8.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம்~ தக்ஷிணாயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாதம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 9.24 PM வரை த்விதீயை பின் த்ருதீயை.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ காலை 7.23 AM வரை மகம் பின் பூரம்.
யோகம் ~ பரிகம்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம் ~ மகரம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ த்விதீயை.
இன்று ~ சந்த்ரதர்சனம் / ஆடிப்பூரம்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 14.8.2026


மேஷம்

வியாபாரம் நிமித்தமான அறிமுகங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். மனதளவில் மாற்றங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : அறிமுகங்கள் ஏற்படும்.
பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் பிறக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ரிஷபம்

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வும் அதற்கான உதவியும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாக்குவாதங்கள் குறையும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.


மிதுனம்

வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுபவங்கள் உருவாகும்.


கடகம்

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பயன்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.


சிம்மம்

மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான மதிப்பினை உருவாக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மகம் : மதிப்புகள் தாமதமாகும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.


கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தன வரவுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரம் நிமித்தமான தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : தடைகள் விலகும்.


துலாம்

உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாலின மக்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். மருத்துவத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் மேம்படும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : இலாபம் மேம்படும்.


விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : அதிகாரம் மேம்படும்.


தனுசு

நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மூலம் : உயர்வு உண்டாகும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.


மகரம்

தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு திறமைக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : அபிவிருத்தியான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கும்பம்

வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். ஆராய்ச்சி கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : ஆசைகள் உருவாகும்.
சதயம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மீனம்

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவினர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். மனை சார்ந்த வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : உயர்வான நாள்.
ரேவதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

Related articles

Recent articles

spot_img