சிம்மம் (செப்டம்பர் 16 – செப்டம்பர் 22)

சிம்ம ராசி : மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். உங்களுக்கு சாதகமாகவே உங்களது தொழில் பங்குதாரர் செயல்படுவார். தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம். வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிதுர் ராஜ்ஜிய சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திப்பதை திட்டமிட்டு செயலாற்றுங்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.