ரிஷபம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

வார ராசி பலன்

rishabham rasi - 2026ரிஷப ராசி : கார்த்திகை இரண்டாம் பாதம் முதல், ரோஹிணி, மிருகசீரிஷம்-2ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் ராசியை சூரியன், செவ்வாய், குரு பார்ப்பதம் மூலம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வில் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.