தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: மகரம்

Published:

new year palangal 2021 - 2026

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs - 2026

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

10 makaram
10 makaram

மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4பாதங்கள், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்: சூரியன் சந்திரன் சுக்ரன் வருட துவக்கத்தில் 4ல்  பெருமூச்சுவிட்டுக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியும் சுகமும் நல்ல நிகழ்வுகளும் உண்டாகி ஒரு உற்சாகத்தை தரும், பணப்புழக்கம் தாராளம், செலவுகளும் சுப செலவுகளாக இருக்கும்.

புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி அந்யோந்யம், குழந்தைகளால் சந்தோஷம், பெற்றோர் சகோதர வகையிலும் நன்மை என்ற அளவில் வருடம் தொடங்கி 4மாதம் வரையில் நன்றாகவே இருக்கும். புதுவீடு போகும் பாக்கியம் சிலருக்கு இருக்கும்.

நீண்டநாள் வழக்கு, ஜீவனத்தில் இருந்த தடை வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள் இவையெல்லாம் மாறி சுமூகமாகவும் நல்ல வேலையும் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர். வேலையில் உற்சாகம், நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறுதல், சிலர் சொந்த தொழில் தொடங்குதல் அதில் வெற்றி, நாட்பட்ட சரக்குகள் விற்று லாபம், தொழில் விஸ்தரிப்பு இப்படி பலவும் நடந்து மகிழ்ச்சி உண்டாகும்.

அரசாங்க உதவி எதிர்பார்த்தோருக்கு அது கிடைக்கும். பணப்புழக்கம் கடனை அடைக்க உதவும். 06.04.21 – 13.06.21 வரையில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி பண சேமிப்பை அதிகரித்து வைத்துகொண்டாலும் முயற்சிகளில் உண்டாகும் வெற்றியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்த நான்கு மாதங்களை சமாளித்து விடலாம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

 ஆவணி முதல் கார்த்திகை வரையில்:  சில விஷயங்கள் கட்டுப்பட்டு, சில முயற்சிகள் தாமதம் என்ற நிலையில் இருக்கும். 13.06.21 – 14.11.21 வரையிலான காலங்கள் மந்தமாக இருக்கும், வேலை பளு, வருமானத்தில் தொய்வு என்று இருக்கும். உடல் ஆரோக்கியம் மருத்துவ செலவு வாழ்க்கை துணை,பெற்றோர், பிள்ளைகள் வழியிலும் மருத்தவ செலவுகள் என்று பெருகும். அக்கம்பக்கத்தாரோடு அல்லது வேலை பார்க்கும் இடத்தில் என்று வீண் வம்புகள் வந்து மன உளைச்சலை தரும். கவனம் தேவை மௌன விரதம் நல்லது செய்யும். சொந்த தொழில் செய்வோரும் தொழிலாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வது அவசியம். போட்டிகள் அதிகரிக்கும். கடும் உழைப்பு தேவை படும், வீடு வாகனம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யும் எண்ணத்தை தள்ளி போடுவது நன்மைதரும். பண பிரச்சனை இருக்கும். அதே போல இல்லத்தில் எதிர்பாராத இழப்புகளும் இருக்கும். அமைதியும், நிதானமும் நலம்விரும்புவோர்களின் ஆலோசனையும் படி நடப்பது நன்மை தரும். கவனம் தேவை

மார்கழி முதல் பங்குனி வரையில்: வரும் பங்குனியில் வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் ஓரளவு முன்கூட்டியே நன்மை தரும், மேலும் சூரியன், புதன், சுக்ரன் சந்திரன் சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றி அடையும். 14.11.21 முதல் நல்ல காலம் திரும்ப ஆரம்பிக்கும். பொதுவாக பொருளாதார ஏற்றம் இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும். அதை சேமித்தால் நலம் தரும். மேலும் குருபகவான் பார்வை சனிபகவான் பார்வை இரண்டும் வீடு வாகன யோகம், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் புதிய உறவுகள் உண்டாதல், புதிய வேலை, யாத்திரை, விருந்து என்று நன்றாகவே இருக்கும். பெரிய சங்கடங்கள் இருக்காது காரணம் மற்ற கிரஹங்களும் பெரும்பாலான நேரங்கள் நன்மை தருவதால் கவலை வேண்டாம். அதே நேரம் 5ல் இருக்கும் ராகு, 6ல் செவ்வாய் மருத்துவ செலவு மறதியினால் பொருள் விரயம், புகழ், செல்வாக்கு பாதித்தல் கொடுத்த வாக்கை தவறவிடுதல் போன்ற பாதிப்புகள் பண விரயம், வீண் செலவுகள், மன உளைச்சல் என்று கொடுக்கும். பெரும்பாலும் நன்மை அதிகம் என்பதால் தீமைகளை சமாளித்து விடுவீர்கள். இந்த பிலவ ஆண்டு நன்றாக இருக்கிறது கவலை வேண்டாம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.13 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

ப்ரார்த்தனைகள் : திருமாலை வணங்குவது அவன் கோயிலகளில் விளக்கேற்றி வழிபடுவது இஷ்ட தெய்வம் அல்லது ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது அன்னதானம், நன்மை தரும்.

Related articles

Recent articles

spot_img