பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா?: ராமதாஸ் கேள்வி
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களால் இந்த முறை வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!
கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகளை குறிவைத்து, தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு, இந்தியப் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால், வாகா எல்லையில், ரம்ஜானுக்கு வழக்கம்போல், ராணுவ வீரர்கள் இனிப்புகளை பறிமாறிக்கொள்ளவில்லை.
டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!
சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.
சுரேஷ் ஜீ நீங்க எப்படி இருக்கீங்க?: தமிழில் விசாரித்த மோடி! மகிழ்ச்சியில் மிதந்த மயிலாடுதுறை தமிழர்!
இந்த உரையாடல்களின் போது, ஏழை, எளிய கிராமப்புற மக்களும் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெறுவதற்காகவே டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்!
இஸ்லாமியரின் பண்டிகையான ஈத் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்.....இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? - என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!
தமிழர் போராட்டங்களை கொச்சைப் படுத்திய குமாரசாமி! முட்டுக் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்!
இத்தனை ஆண்டுகாலமாக இதே செயலைத்தானே கர்நாடகம் செய்து வந்தது. இப்போது ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காமல், முறையான கணக்கு வழக்கு மேற்கொள்ளாமல், கள்ளக்கணக்கு காட்டி கனமழை நீரை கபினியில் இருந்து திறந்துவிட்டு, கர்நாடகம் மேற்கொள்ளும் அரசியலை தமிழக கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை!
‘காலா’வதியாகிப் போனாலும்…. “நல்லாப் போவுது காலா” என சந்தோஷிக்கும் ‘சன்யாஸி’ ரஜினி !
காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!
தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.
இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!
தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது.
தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!
தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.
