December 5, 2025, 1:00 PM
26.9 C
Chennai

பவன் கல்யாண் என்ற தளபதி!

pawan kalyan modi - 2025
#image_title

ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்


வரும் நாட்களில் பவன் கல்யாண் மீது சேற்றை வாரியிறைக்க இங்குள்ளவர்கள் முற்படலாம் என்கிறார்கள். உளவு துறை தகவல்களும் இதனை ஊர்ஜிதம் செய்து இருப்பதாக சொல்கிறார்கள்.

#ஏன்….???

வேறென்ன சநாதனம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் இங்கு உள்ள இவர்களை கதற செய்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும்…., சமூக வலைத்தள பக்கங்களில், தன்னிச்சையாக அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். போதாக்குறைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஆதரிக்காத நேதாஜி மக்கள் கட்சி நிறுவனர்… முன்னாள் காவல் துறை அதிகாரி மற்றும் இந்நாள் வழக்கறிஞர் திரு. வரதராஜன் போல்வார் எல்லாம் பகிரங்கமாக பவன் கல்யாண் இந்த ஒரு தருணத்தில் நாம் ஆதரவு தெரிவித்து அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பதிவு போட்டிருந்ததை குறிப்பிடவேண்டும்.

அவரும்….. அதாவது பவன் கல்யாண்,ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வர் பதவி வகிக்கிறார்…. இங்கும் உதயநிதி அதுபோலான பதவியை சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அப்படி ஒரு பதவியே….. அதாவது துணை முதல்வர் என்கிற பதவியே அங்கீகரிக்கப்படவில்லை. ஆன போதிலும் அப்படி ஒரு பதவியை சட்டமன்றத்தால் கொண்டு வந்து நிர்வகிக்கப்படுகிறது. அதிகாரிகளும் கட்டுப் படுகிறார்கள்.

ஆந்திர துணை முதல்வர் பதவி ஏற்ற நாளில் இருந்து பவன் கல்யாண் தனது வழக்கமான வெள்ளை நிற குர்தாவை விட்டு விட்டு காவி நிற உடையை… அதிலும் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் அதற்கு தோதான குர்தாவோடு வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இது காலஞ்சென்ற NTR பாணியில் அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிற்பல இடங்களில் எதிர்ப்பும் இருப்பதாக சொல்கிறார்கள். காரணம் தற்சமயம் முதல்வர் பொறுப்பு வகிக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியான தெலுங்கு தேசத்தை தொடங்கி வைத்ததே என்டி ராமா ராவ் தான். அவரை பிரதி எடுக்கும் இவரது செயல்பாடு ஏற்புடையதாக இல்லை என சிலர் பொறுமிக்கொண்டுயிருக்க…. பாபுகாரு தெளிவாக இருக்கிறார் எதற்கும் அசைந்து கொடுக்காமல்……

காரணம் அவருக்கு ஒன்று பட்ட ஆந்திராவில் தான், உயிர் நாடியே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை எப்படியும் சாதித்து விடவேண்டும் என இவர்….. பவன் கல்யாண் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்.

அதற்கு அவர் கையெடுக்கும் அஸ்திரம் தான் பலரது அஸ்திவாரத்தையே ஆட்டிவித்திருக்கிறது. சிறுபான்மையினர் நலன் என்று குதிரை ஒட்டாமல் …. வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்காமல்…… அதேசமயம் தனது பாரம்பரியத்தையும் விட்டு கொடுக்காமல் இறங்கி வேலை பார்த்து வருகிறார். எடுத்த எடுப்பிலேயே இவருக்கு துணை முதல்வர் பதவி கிட்டி விடவில்லை என்பதே இங்கு உள்ள நம்மில் பலருக்கு தெரியவில்லை.கிட்டதட்ட பத்து ஆண்டுகள் கடுமையான உழைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது.

இவரது ஜன சேனா …. நிஜத்திலும் ஜனங்களின் சேனாவாகவே கட்டமைத்து வைத்திருக்கிறார் இவர். நிச்சயமாக இஃது பிரம்ம பிரயத்தனமான சமாச்சாரம். காரணம் இவரது சொந்த சகோதரர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இதே போன்றதொரு கட்சி தொடங்கி, பிரஜா ராஜ்யம் பெயர் வைத்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அளவிற்கு வந்து பின் காற்றில் கரைந்த பெருங்காயம் போலும் காணாமல் போன ஒன்று. இதனை தொடர்ந்து இவர் கட்சி ஆரம்பித்தார் என்றால் அன்று உள்ள சூழ்நிலையில் ஆந்திர மக்கள் என்னவாக புரிந்து கொண்டு இருப்பார்கள் என யோசனை செய்து பாருங்கள். அதனை எல்லாம் கடந்து நெருப்பாற்றில் நீந்தி, தோல்வியை சந்தித்து அதிலிருந்து மீண்டு இன்று ஆலமரம் போல் கிளை பரப்பி தழைத்து வளர்ந்து வருகிறார் இவர்.

ஓர் நடிகராக இவரது சகோதரர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன்னை முதலிடத்தில் தக்கவைக்க பெரும் போராட்டங்களை எல்லாம் நடத்தி … கடந்து வந்தவர் என்றால்…. இவர், தனக்கு கிடைத்த பட வாய்ப்புகள் தனது அண்ணன் அரவணைப்பால் தான் என பலரும் நினைத்த வந்த போதிலும்…. இவரது அரசியல் பிரவேசம் மற்றும் அதன் இன்றைய வீர்ய வளர்ச்சிக்கு பின்னணியில் இருப்பது நிஜத்தில் சிரஞ்சீவி அல்ல…… சிவராமகிருஷ்ணனின் சீடர் ஒருவர். அவரது கருத்தாக்கங்களை இங்கு AK படங்களிலும் காணலாம் என்கிறார்கள்‌. பெயர் இங்கு இத்தருணத்தில் வேண்டாம். ஹரிஹர புக்கர் மூலமாக அந்நாளில் விஜயநகர சாம்ராஜ்யம் தென்னிந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல் இவரை முன்னிலை படுத்தி அதாவது பவன் கல்யாண்னை முன்னிறுத்தி…. எனப் பல காரணங்கள் பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எத்தனை தூரம் இவர் இதனை மெய்பிக்க போகிறார் என்பதே வரும் காலங்களில் தான் தெரியும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்……

90களுக்கு பின்னான சுதந்திர இந்திய அரசியலில் தென்னிந்தியர்களின் ஆளுமை பெரும் செல்வாக்கோடு இந்திய அரசியலையே ஆட்டிப் பார்த்தது.திராவிட அரசியலால் அது பெரும் முடை நாற்றம் கொண்டதாக மாறி நின்ற சூழலில்…. அமெரிக்க பாணியிலான அரசியல் இங்கு முன்னெடுக்கப்பார்த்தனர். வட இந்தியா தென் இந்தியா எனும் பேதத்தை முன்னெடுக்க…… அது கரை சேர காலம் ஆகும் என்பதால் ஆறு மாநிலங்களை மாத்திரம் ஒன்றிணைத்து அதனை கொண்டு ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடுவது என்கிற நப்பாசையிலும் வேலை பார்த்து இருக்கிறார்கள்……. ஒரு சாரார்.

அந்த மிஷனரிகளின் எச்சம் தான் ஆறு கைகளை அடையாளமாகக் கொண்ட மக்கள் நீதி மய்யம் தொடங்கி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக நம் தமிழகத்தில் ஒரு முன்னணி பத்திரிகையை வாங்கி அதில் என்னுள்ளே மய்யம் கொண்டு புயல் என ஆரம்பித்து…. கிராமத்து சாமிகள் என்கிற ரீதியிலான பம்மாத்து வரை பண்ணிப் பார்த்தார்கள்….. ஒன்றும் பப்பு வேகவில்லை. இதே காலகட்டத்தில் தான் ஆட்சியில் இருந்தவர்களை கொண்டு சாமி சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அலப்பறை கொடுத்து அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைத்திருப்பதாக சொல்லி……. என ஏகத்திற்கும் என்னென்னவோ நடந்தது.

அந்நிய படையெடுப்பின் போது கூட பாதுகாக்கப்பட்ட… பாதுகாப்புடன் இருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சிலாரூபங்கள் …… இந்த குரூர் கைகளில் ஆட்சி வந்ததும் காணாமல் போனது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்த்து விட்டே பவன் கல்யாண் முதலில் ஆலயத்தில் இருந்தே தனது வேலையை தொடங்கி இருக்கிறார். இந்துக்களின் புனித தலங்களை பாதுகாக்க அவற்றை பேணி பராமரிப்பு செய்ய தனி சட்ட திட்டங்களை வகுக்க சமீபத்திய நாட்களில் குரல் கொடுத்து வருவதெல்லாம் இதன் எதிரொலி தான். நிஜத்தில் இது அத்தனை சுலபமான காரியமல்ல. செக்கூரியலிசம் பேசும் தேசத்தில் இது அசாத்தியம். ஆனாலும் அதனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்திருக்கும் அவரது நடவடிக்கையை நிச்சயம் பாராட்ட வேண்டும். எத்தனை பேர் இதற்கு துணை வருவார்கள் என்பதே தெரியாது. அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் கேட்கவே வேண்டாம்.

பழங்கால நகைகளை….. பராமரிப்பு என்கிற பெயரில் ஆபரணங்களை உருக்கி தங்கமாக பெட்டகத்தில் வைத்து காபந்து செய்வதாக பொது வெளியில் அறிவித்திருக்கிறார்கள். அப்படி என்றால் அதில் உள்ள விலை உயர்ந்த கற்கள்… நல்முத்து… பவழம்… வைரம்….. மூச் ….. பேச்சே கிடையாது.யாரும் பேசுவதும் கூடாது என மிரட்டப்பார்க்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று பாருங்கள்…..இது திருமலை திருப்பதியை சேர்ந்த விஷயம். உலகின் அதி அற்புதமான பட்டு ரோஜா நிறத்திலான வைரத்தை கொண்ட பதக்கங்களை பெருமாளுக்கு உற்சவ காலங்களில் அணிவிக்கும் நடைமுறை இருந்தது 1990 வரையில். பின்னர் இது காணாமல் போனதாக பதிவு செய்து இருக்கிறார்கள். RTI மூலம் கேட்டதற்கு, பக்தர் ஒருவர் வீசி எறிந்த காசுகளால் பதாகங்களில் உள்ள வைரம் நொறுங்கி சேதமானது என்பதால் சாத்தவில்லை என பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அது வெளிநாட்டில் 2017-18 விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். நன்கு கவனியுங்கள் இந்த ஆண்டை….. நாளையே இதற்கு யாரை குறை சொல்ல போகிறார்கள் என்பது வரை நன்றாக விளங்கும்.

அதாவது வைரம்…. உலோகத்தால் ஆன காசால் சேதமானது என்று சொல்லும் அளவிற்கு இறங்கி இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க……. விஷயத்தின் வீர்யம் எத்தகையது என்பதை உங்களால் யூகித்து பார்க்க முடிகின்றதா…..???

ஏதோ இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தான் இப்படி என எண்ணிட வேண்டாம்…… அங்கேயே இப்படி என்றால் இங்கே உள்ள நிலையை நினைத்து பாருங்கள்.,இதன் ஆழம் தெரியும் இதன் வீர்யம் புரியும். புள்ளி விவர கணக்கு சொல்வதென்றால்…. சற்றேறக்குறைய சுமார் 1380 சிலாரூபங்கள் நம் தமிழகத்தில் இருந்து மட்டுமே காணாமல் போய் இருக்கின்றன….. என்கிறார்கள். இன்றளவும் இதற்கு விடை காணவில்லை.

ஏதோ திமுக தான் இப்படி என நினைத்து கொண்டு விடவேண்டாம்……. அதிமுகவுக்கும் இதில் பங்கு உண்டு. இன்னமும் கேட்டால் தற்போது உள்ளவர்களை காட்டிலும் அவர்கள் தான் இதில் ஏகத்திற்கும் புகுந்து அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

ஆக இந்துசமய அறநிலையத்துறை யாருக்கு என்ன செய்கிறார்கள் என்பதே சாமானியனுக்கு இன்னமும் சரியாக தெரியாது. நம் பட்ஜெட்டில் இந்த HR&CE வருமானம் மட்டுமே 3.857% வகிக்கிறது என்கிறார்களே தவிர என்னென்ன எது மாதிரியான வருமானம் என்பது மட்டும் பரம ரகசியம்.

கமலாலய தலைவர்களில் ஒருவரான H ராஜா தலைமையில் ஆலய மீட்பு குழு அல்லது ஆலய பாதுகாப்பு குழு என்ற ஒன்றை பதிவு செய்து நிர்வகிக்க…….இது நாள் வரையில் என்ன மாதிரியான வேலைகளை அதில் முன்னெடுக்கப்பட்டது என்கிற கேள்விக்கு மாத்திரம் பதிலே கிடையாது.

அதே நேரத்தில் அன்பு தானே எல்லாம் சேது….. யூடியூப் சேனல் நடந்தும் அல்லது நிர்வகிப்பவர் வாரத்திற்கு ஒரு கோவில்.. அதிலும் பாழடைந்த கோவிலை சுத்தம் செய்தல் அல்லது கண்டெடுத்தல் என்கிற பணியை செவ்வனே செய்து வருகிறார். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு பழமையான இதுபோன்ற கோவில்கள் எல்லாம் மாநில அரசின் எந்த ஒரு பதிவேட்டிலும் காண முடிவதில்லை என்றால்……. இதன் பொருள் என்ன….!!!

உங்களுக்கு புரிகிறதா இந்த விஷயம்…..

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சில நூறு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்பதே அறியாமல் இங்கு பலர் இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனமான உண்மை. வேர்களை அழித்து…. விழுதுகளையும் வளரவிடாமல் செய்து பெரியார் பெயரில் நாசகாரியம் செய்பவர்களுக்கு நாமும் துணை போகும் அவல நிலையில் தான் இன்றைய வாழ்க்கை முறை அமைந்துள்ளது.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற காலங்காலமான பம்மாத்து கேள்விக்கு விடை தேடாமல்…. மிஷனரிகள் விஷ தீஷ்ணயம் தாண்டி தடைகளை உடைத்து திமிரி வரும் பவன் கல்யாண் போல்வாரை வாரி அணைத்து பாதுகாப்பது நமது கடமையாகவாவது கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இயலுமா……!!!!!

ஜெய் ஹிந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories