தலைவருக்கு அப்பறம் ’தல’கிட்ட தான் அது இருக்கு ! பிரபல நடிகர் பேட்டி !

Published:

ajith 1 - 2026தல என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற அஜித்குமார் தற்பொழுது நடித்து வெளிவந்து, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் நேர் கொண்ட பார்வை, இந்த படத்தில் வக்கீலாக நடித்திருக்கும் அஜித் நடிப்பை அனைவரும் பாராட்டி வாழ்த்தும்  தெரிவித்து வருகின்றனர்.ajith - 2026தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு பெரும் ரசிகர் படையே உள்ளது.ரசிகர்கள் மீது அஜித்தின் அக்கறையும் சிறப்பான ஒன்றாகும்.ajith 3 - 2026இந்தி படமான பிங்க் படத்தின் ரிமேக் நேர்கொண்ட பார்வை இந்தியில் அஜித் கேரக்டரை அமிதாப் நடித்திருப்பார்.  கதைப்படி வழக்கறிஞராக வரும் அபிதாப் ஒரு குடிகாரர். சதா குடித்துக்கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட பிரியங்கா படத்தில் வக்கீல் பிரபு வருவாரே அதுபோல். அதைத்தவிர அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இருக்காது.ஆனால் இந்த படத்தில் அஜித் குடிகாரர் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி.ajith 2 - 2026குடிகாரராக தன்னைக் காட்டிக்கொண்டால், தனது ரசிகனும் குடிப்பதை தவறாக எண்ண மாட்டான். மேலும், தன்னை பார்த்து குடிக்காதவன் கூட குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித்.அதே சமயம் அந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்திற்கு ஒரு அழுத்தம் தர வேண்டும். எனவே, குடிகாரன் என்பதைவிட மனநோயாளி என்பது எத்தனையோ மேலானது என அஜித் யோசித்துள்ளார். இதுதான் அவரது வெற்றிக்கு காரணம். ரசிகர்கள் மீது தேவையில்லாத விஷயங்களை திணிக்க வேண்டாம் என அவர் தீர்மானித்திருப்பது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய நற்செயல்.mgr - 2026

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

எம்.ஜி.ஆர் அவர்களும் ரசிகர்களிடத்தில் அக்கறையும் அன்பும் கொண்டவர். தலைவர் என எல்லோராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திரை உலகத்திலும், ரசிகர்களிடையேயும் இருந்த க்ரேஸ் தற்பொழுது அஜித்திற்குதான் இருப்பதாக பல சினிமா பிரபலங்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.அதை தான் தற்போது பிரபல குணச்சித்திர நடிகர் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையாவும் சமீபத்திய பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார்.ak.mgr - 2026அதில் அவர் கூறுகையில், பார்ப்பது அப்புறம், பெயரை சொன்னாலே பிடிக்கும் என்றால் அது இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அப்பாவுக்கு நல்ல நெருக்கம். நான் குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன். அவரை எந்தளவிற்கு பிடிக்குதோ அந்த ஈர்ப்பு நான் பார்த்த வரைக்கும் அஜித் சாரிடம் இருக்கிறது. இவர்களது பெயர்களை சொன்னால் என்ன ரியாக்‌ஷன் உள்ளது என்பதை பார்த்திருக்கிறேன். என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img