சி.மு, சி.பி, என வாழ்க்கையைப் பிரித்த பிரசன்னா!

Published:

prasanna - 2026

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரசன்னா, மனைவி சினேகாவால் தான் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்.

சினேகாவும் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு சினேகா குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

prasanna 1 - 2026

பிரசன்னா திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் அறிமுகமான பிரதர்ஸ்டே படம் சமீபத்தில் திரைக்கு வந்து கேரளாவிலும் பிரபலமாகி இருக்கிறார். மலையாள படத்தில் நடித்தது குறித்து பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியதாவது:

senaka prasanna - 2026

“சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் 5 ஸ்டார் படம் மூலம் அந்த லட்சியம் நிறைவேறியது.

parassana 3 - 2026

எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன்பு, சினேகாவுக்கு பின்பு என்று பிரிக்கலாம். சினேகாவை மணந்த பிறகு வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

prasanna brothers day - 2026

மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். பிரதர்ஸ்டே படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. இது மலையாளத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். மலையாளத்தில் சரளமாக பேச கற்றுக்கொண்டேன். இவ்வாறு பிரசன்னா கூறினார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img