தவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா!

சினி நியூஸ் சினிமா
priya bhavani sankar - 2026

எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் பற்றி பரவி வரும் வதந்திக்கு, முற்று புள்ளி வைத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தனர் .2019ன் நல்ல வெற்றியையும் மக்களிடம் பாராட்டையும் பெற்றது.

மான்ஸ்டர் படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு தேவையான மிக சரியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் . இருவரும் சரியான நல்ல ஜோடி என்ற பெயரும் இந்த படத்தின் மூலம் இருவருக்கும் கிடைத்தது..

இந்த வெற்றியை அடுத்து இந்த ஜோடி பொம்மை எனும் படத்திலும் நடித்து வருகிறது . இந்த படத்தின் புகைப்படங்கள் இதுவரையில் வெளியாகி சமூக வளைத்தலங்களில் டிரெண்ட் ஆனது .

இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் பற்றிய வதந்தி ஒன்று சமூக வளைத்தலங்களில் பரவியது அது என்னவென்றால் எஸ்.ஜே.சூர்யா ப்ரியாவிடம் தனது காதல் பற்றி கூறியதாகவும் அதற்கு ப்ரியா நிராகரித்து விட்டார் என்ற தகவல்கள் பறவியது .

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .

அதில் கூறுகையில் சில முட்டாள் நான் ப்ரியா பவானி சங்கரிடம் ப்ரொபோஸ் செய்து விட்டேன் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்று தவறான தகவலை சமூக வளைத்தலங்களில் பரப்பி வருகின்றனர்.

இது முற்றிலும் பொய் ப்ரியா பவானி சங்கர் எனக்கு நல்ல தோழி மற்றும் சக நடிகையாவார் தயவு செய்து இந்த பொய்யை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார் .

இதனை போல வதந்திகள் பல முக்கிய பிரபலங்களுக்கு நடக்கும் ஒன்று தான் இது முற்றிலும் தவறு இதனை போல வரும் பொய் தகவல்களை யாரும் ஆராயமல் பகிர கூடாது என்பது பலரின் கருத்து .இதனை எஸ்.ஜே.சூர்யாவும் வலியுறுத்தி கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.