‘தல’ சொன்னது தப்பாம நடந்திருச்சு… : திரௌபதி ‘மோகன்’ பெருமிதம்!

Published:

mohan g draupati - 2026

தல அஜித் சொன்னது தப்பாம நடந்து போச்சு என்று பெருமிதத்துடன் சொல்கிறார் திரௌபதி பட இயக்குனர் மோகன்.

இயக்குனர் மோகன் இயக்கிய முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது திரௌபதி என்ற படத்தை இயக்கியுள்ளார் மோகன். இதில் உண்மைச் சம்பவங்கள் பலவற்றைக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக ஷாலினியின் அண்ணன், அஜித்தின் மைத்துனன் ரிச்சர்ட் நடித்துள்ளார்.

இந்தப் படம் வெள்ளிக்கிழமை நேற்று வெளியானது. ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி என பலர் நடித்துள்ளார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் இசையமைத்துள்ளார்.

திரௌபதி படம், சமூகத்தில் நிலவும் நாடகக் காதல், திருமணம் என்கிற பெயரில் ஏமாற்றும் கொள்ளைக்காரர்கள், சாதி ரீதியாக சமூகத்தைச் சுரண்டும் கேங் என பல பிரச்சனைகளை அலசியிருக்கிறது. குறிப்பாக, பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளனர்.

காதல் என்ற பெயரில் பெண்களின் கற்பைச் சூறையாடுவதும், வாழ்க்கையைச் சீரழிப்பதுமான சம்பவங்களை பற்றி வெளிப்படையாகக் கூறியுள்ளனர். இந்தப் படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களித் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சாணக்யா வெப் டிவியின் பேட்டியில் அவர் கூறியிருப்பவை…

நல்ல படத்திற்கு புரோமோஷன் தேவையில்லை, விளம்பரம் தேவையில்லை என்று அஜித் கூறுவார். அதே போல் திரௌபதி படத்தின் ப்ரோமோஷன் என நாங்கள் எதுவும் செய்யவில்லை. இந்தப் படத்தை நாங்கள் குறைந்த அளவு செலவில் தான் எடுத்தோம். மேலும், தல அஜித் சொன்னது போலவே எங்களுடைய படத்திற்கும் நடந்து விட்டது என்கிறார்.

இயக்குனர் மோகன் பேட்டி அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img