இயக்குநர் அளித்த உத்தரவாதத்தால் படப்பிடிப்பிற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
.
இந்நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஆந்திராவில் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்வதற்கு அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்திருக்கும் சூழ்நிலையில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கும் முதல் படமாக மும்பை சாகா அமைய இருக்கிறது. ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறது. 12 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இயக்குநரின் இந்த முடிவிற்கு படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் அளித்த உத்தரவாதத்தால் படப்பிடிப்பிற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். இந்த 12 நாட்கள் படப்பிடிப்பில் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி உட்பட காஜல் அகர்வாலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பயத்தில் சீரியல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவே பலர் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மும்பை நடிகர்கள் தைரியமாக களத்தில் இறங்குகிறார்கள்.