அஜித்துடன் இணைந்து பில்லா , ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார்
இந்நிலையில் அஜித்தின் 65வது படத்தின் இயக்குநர் யார் என்ற அலசல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான விஷ்ணுவர்தன் 65 வது படத்தை இயக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து பில்லா , ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். எனவே இவர்கள் இருவரும் மீண்டும் அஜித்தின் 65வது படத்திற்கு இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தாலும் விரைவில் இந்த கூட்டணி இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் 80களில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.