யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் நடைபெற்றது

யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த எஸ்.ஜெய்கணேஷ் என்ற நடிகர் சத்யாவுக்கும், எஸ்.அமிர்தலிங்கம், சரஸ்வதி தம்பதியின் மகள் ஏ.மகாலட்சுமியின் திருமணம் (24-08-2020, திங்கள் கிழமை) காலை கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் இனிதே நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் காலை 6.45க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
விரைவில் வரவேற்புரை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.. மேலும் சத்யா நடித்து முடித்த ஒரு திரைப்படமும் கொரோனா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது.