போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக எழுந்த புகாரில், பெங்களூரில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்ததாக, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை ராகினி திவேதி உள்ளிட்ட சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை ராகினி திவேதியும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், ஒரு காதல் செய்வீர் படத்தில் அறிமுகமாகி பின்னர் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோக கும்பலுடன் தொடர்பிருப்பதாகக் கூறப் பட்டது.
இந்த நிலையில், இன்று, பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், சஞ்சனா கல்ராணியின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
actress sanjana galrani arrested in bangalore drug case
Source: Vellithirai News