நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் மண் உருண்ட மேல மனுச பய ஆட்டம் பாரு என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால் படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மனுதாரர் மீண்டும் புகார் மனுவை அளிக்க அறிவுறுத்திய நீதிபதி இளந்திரையன, புகார் மீது சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.