எஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

Published:

சர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். 

செப். 25ஆம் தேதி காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான கட்டணம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். 

எஸ்பிபி சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக பரவி வரும் வாட்ஸ் அப் தகவல்… எஸ்பிபி சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, அவரது குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.  

ஆனால் இதனை எஸ்.பி.பி. மகன் சரண் திட்டவட்டமாக மறுத்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து சிகிச்சை கட்டணம் தொடர்பாக விளக்கமளித்தனர். 

ea70bda51102220846698b0344d2e330 - 2026

அப்போது சரண் கூறுகையில்; எஸ்.பி.பி.,க்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது. எஸ்பிபி சிகிச்சைக்கு நாங்களும், மருத்துவ காப்பீடு மூலமும் அவ்வபோது கட்டணம் செலுத்தி வந்தோம். அவர் மறைவுக்கு பின்னர் சிகிச்சை கட்டணம் பற்றி கேட்ட போது வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது. கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை. 

கொரோனா காரணமாக எஸ்.பி.பி., மரணமடையவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.,யின் மருத்துவ செலவு தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்,  மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் !`

மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட்  வெளியிட்ட அறிக்கையில், மறைந்த எஸ்பிபி குடும்பத்தினருக்கு மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு முன்பு மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த மருத்துவமனை மிகச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர்,  
 
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ செலவு தொடர்பாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் இதை மேலும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img