தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவருக்கு வயது 55. போக்கிரி, புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் அவர் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். இவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Source: Vellithirai News