கையில் பாம்புடன் சிம்பு.. பிரச்சனை பண்ணாதீங்க.. சுசீந்திரன் விளக்கம்…

சினி நியூஸ் சினிமா

சிம்பு தனது உடல் எடையை குறித்து சிறு வயது பையன் போல் மாறியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுவது சாத்தியமில்லை என்பதால் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு சிம்பு பாம்பை தனது தோளில் சுற்றிக்கொண்டு கையில் பிடித்து நிற்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், பாம்பை கையில் பிடித்து பையில் சிம்பு போடுவது போல ஒரு வீடியோவும் வெளியானது.

25acd5c3429e20456d8daa5deffc90f8 - 2026

இது நிஜ பாம்பை வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இதுவே சிம்புவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலஙகு நல ஆர்வலர் ஒருவர் சென்னை வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு கையில் பிடித்திருப்பது உண்மையான பாம்பு அல்ல.  படத்தில் நிஜ பாம்பு போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.