நஸ்ரியா போல் நல்ல நடிகையாக வேண்டும்: கன்னிமாடம் சாயா தேவி!

சினி நியூஸ் சினிமா
kanni madam - 2026

கடும் போட்டிக்கு நடுவே நேற்று வெளியான கன்னி மாடம் திரைப்படம், மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வெற்றி நடை போடுகிறது.

அறிமுக இயக்குநரான போஸ் வெங்கட், சாதிய கொடுமையை மையமாக வைத்து, காதலை உயர்த்தி பிடித்திருக்கும் கன்னி மாடம் திரைப்படம், வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராமும், நாயகியாக நடித்த சாயா தேவியும் புது முகங்கள் என்ற எண்ணமே எந்த காட்சியிலும் தோன்றவில்லை.

அந்த அளவுக்கு கண்களால் நடித்து கலக்கி உள்ளனர். அதிலும், நாயகி, சாயா தேவியின் அழுத்தமான நடிப்பு பிரமாதம்.

sayadevi - 2026

கன்னி மாடம் படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ள நடிகை சாயா தேவி, இயக்குநர் யார் கண்ணனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நண்பரான போஸ் வெங்கட், தான் இயக்கும் படத்தில், தன்னை நாயகியாக அறிமுகப்படுத்துவார் என்பது தனக்கு தெரியாது, என்றும், அப்பா மூலமாக சினிமா ஆசை வந்ததால், போஸ் வெங்கட் அங்கிள் கேட்டதும், ஓகே சொல்லி நடித்தேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் நாயகி சாயா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில், உங்களுக்கு பிடித்த நாயகி யார்? எந்த ஹீரோயின் இன்ஸ்பிரேஷன் என்ற கேள்விக்கு, தனக்கு நடிகை நஸ்ரியா தான் ரொம்ப பிடிக்கும்.

அவரது க்யூட் மற்றும் துடிப்பான நடிப்பு தன்னை ரொம்பவும் இன்ஸ்பயர் பண்ணி உள்ளதாகவும், தானும் அது போல நல்ல நடிகையாக உருவாக வேண்டும் என்றும் சாயா தேவி தெரிவித்துள்ளார்.

கன்னி மாடம் திரைப்படம் மக்களிடையே இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளதற்கு இயக்குநரின், திரைக்கதை தான் முக்கிய காரணம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி பெயரால் காதலையும், சமூகத்தையும் பிரித்து வைப்பார்களோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.