ராமராஜ்ய மகிமை: உ.பி.,யில் மிகப் பெரும் தங்கச் சுரங்கங்கள்!

Published:

gold mine in up - 2026

உத்தரப்பிரதேசத்தில்மிகப்பெரும் அளவில் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றை வெளியில் தோண்டி எடுத்தால் உலகிலேயே தங்கச் சேமிப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா வரும் என்று கூறப் படுகிறது. இது ராமராஜ்யத்தின் மகிமை என்று உபி துணை முதல்வர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து தங்கத்தை வெளியில் எடுத்தால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்திற்கு இந்தியா வந்து சேரும் என்கிறார்கள். இது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது ராமராஜ்ய மகிமைதான் என்கின்றனர் உபி.,வாசிகள்!

கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க சுரங்கங்கள் இருப்பதாக ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா கண்டுபிடித்துள்ளது. இந்த இடத்தில் சுமார் 3000 டன்களுக்கு மேலாக தங்கம் இருப்பதாக ஜிஎஸ்ஐ, உத்தரப் பிரதேச கனிமம் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறை இணைந்து செய்த சர்வே மூலம் கண்டறிந்தார்கள்.

gold mine in up2 - 2026

சோன்பத்ரா மாவட்டத்திலுள்ள சோன்பஹாடி, ஹார்தி என்ற இடங்களில் இந்த தங்கச் சுரங்கங்கள் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். சோன்பஹாடியில் 2143 டன்களும் ஹார்தியில் 646 டன்களும் தங்கம் கிடைத்துள்ளதாக ஜிஎஸ்ஐ அதிகாரிகள் கணக்கு எடுத்துள்ளார்கள்.

இந்த சுரங்கங்களில் தங்கத்தை தோண்டி வெளியில் எடுப்பதற்காக மைனிங் வேலைகளை லீசுக்கு கொடுப்பதற்கு அரசாங்கம் யோசித்து வருகிறது. இதன் மேல் சர்வே நடந்து வருகையில் ஈ டெண்டரிங் மூலமாக ஏலம் விடுவதற்கு 7 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

தங்கத்தோடு யுரேனியம் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள் கணக்கீடு. சோன்பத்ரா விலுள்ள தங்கச் சுரங்கம் தற்போது நாட்டிலுள்ள 618.2 டன் தங்கத்தை விட 5 மடங்கு அதிகம். இதன் மதிப்பு 12 லட்சம் கோடிகள் என்று தெரிகிறது.

சுமார் இருபது வருடங்களாக இந்த இடத்தில் தங்கச் சுரங்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக ஜிஎஸ்ஐ கணக்கீடு தெரிவித்தது . இது உண்மையானால் தங்கச் சுரங்கங்களில் உலகத்திலேயே பாரதம் இரண்டாவது இடத்திற்கு வரும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img