தவசியிடம் பேசிய ரஜினி… அதுக்கு அப்புறம் பண்ணியதான் ஹைலைட்…

Published:

rajini

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.
குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர்  பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தனது சிகிச்சைக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

இதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல், நடிகர் சூரி தனது தரப்பில் ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளார். மேலும், மருத்துவமனையில் தவசி மற்றும் அவருடன் தங்கியிருக்கும் 3 பேருக்கும் 3 வேளை உணவுகளை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும், அவரின் சிகிச்சைகளுக்கும் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.நடிகர் விஜய்சேதுபதி ரூ.1 லட்சம், சிம்பு ஒரு லட்சம் என நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினி தவசியிடம் செல்போனில் பேசினாராம். மேலும், அவரின் வங்கி கணக்கையும் வாங்கியுள்ளாராம். எனவே, அவருக்கு பெரிய அளவில் அவர் பண உதவியை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img