சூரரைப்போற்று என்ன ஒரு படம்!. பாராட்டி தள்ளிய நடிகர் மகேஷ்பாபு….

சினி நியூஸ் சினிமா

ccf6d19d7177c078bb029628040d0179 - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சூரரைப்போற்று திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சூர்யா தனது தோளில் சுமந்திருப்பதாக புகழாராம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ என்ன ஒரு அருமையான படம். சிறப்பான இயக்கம் மற்றும் நடிப்பு. சூர்யா நடிப்பின் மேலே இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.