அந்த மீசையை மறுபடி நாங்க பாக்கணும் – தவசியை சந்தித்த ரோபோ சங்கர்

Published:

robo

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர்  பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தனது சிகிச்சைக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  எனவே, சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி என பலரும் உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் அவரை நேரில் சந்தித்து பண உதவி செய்தார். மேலும், ‘அந்த மீசையை நாங்க மறுபடி பார்க்கணும்’ எனக்கூறினார். அதற்கு தவசி ‘நிச்சயம் நான் மீண்டு வருவேன்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img