பிரபல நடிகர் ராவி கொண்டல் ராவ் காலமானார்!

Published:

ravikondalrao - 2026

பிரபல நடிகர், ராவி கொண்டல் ராவ் செவ்வாய் மதியம் நாலரை மணிக்கு மாரடைப்பால் பேகம்பேட் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பிரபல நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் திறமைகொண்ட ராவிகொண்டல ராவு 88 வயதில் காலமானார். 600 க்கும் மேலாக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மனைவி ராதாகுமாரியும் இவரும் சேர்ந்து கணவன் மனைவியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இவரும் ராதா குமரியும் முதலில் தமிழ் திரைப்படங்களுக்கு தெலுங்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ராவிகொண்டல் ராவு 1932 ல் பிப்ரவரி 11 அன்று பிறந்தார். 1958 சோபா என்ற திரைப்படத்தோடு இவருடைய சினிமா பிரவேசம் ஆரம்பமானது.

ravikondalrao2a - 2026

ஆரம்பகாலங்களில் மதராஸில் ஆனந்தவாணி என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே சினிமாவிலும் நடித்து வந்தார் . பாபு, ரமணா இருவரும் ராவிகொண்டாராவு க்கு சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் ராவிகொண்டல ராவு ரமணா அவர்களின் வீட்டில் தங்கி இருந்தார். பைரவ தீபம், பிருந்தாவனம், பெள்ளி புஸ்தகம் போன்ற சினிமாக்களுக்கு டப்பிங் அளித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

சினிமா துறைக்கு வந்த ஆரம்ப நாட்களில் மலையாளம் தமிழ் சினிமாக்களுக்கு டப்பிங் அளித்தார். அங்குதான் டப்பிங் அளித்துவந்த ராதா குமாரியை ராவி கொண்டல் ராவ் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ராவி கொண்டல ராவு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கதைகள் நாடகங்கள் கூட எழுதினார். நகைச்சுவை கலந்த பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

ravikondalrao3 - 2026

இவர் மனைவியும் பிரபல நகைச்சுவை நடிகையுமான ராதாகுமாரி 2012 ல் காலமானார். பிளாக் அண்ட் வொயிட் என்ற பெயரில் திரைப்படத் துறையை பற்றி சிறந்த தொகுப்பு எழுதி அளித்தார். 2004ல் பிளாக் அண்ட் ஒயிட் என்ற புத்தகத்திற்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்த சிறந்த புத்தகமாக மாநில அரசாங்கத்தில் இருந்து நந்தி அவார்டு பெற்றார். அதேபோல் கலைத்தூறைக்கு இவர் ஆற்றிய சேவைக்காக ஆந்திர விஸ்வ வித்யாலயம் கலாப்ரபூர்ணா விருது அளித்து கவுரவித்தது.

திரைத்துறைக்கு வரும் முன்பு ராவி கொண்டல ராவு ஆர்எஸ்எஸ் க்ரியாசீல அங்கத்தினராக பணிபுரிந்தார்.

பிரபல தயாரிப்பு அமைப்பு விஜயா ஸ்டுடியோவோடு ராவி கொண்டல் ராவு மிகவும் நட்போடு இருந்தார். அதனால்தான் நாகிரெட்டி அறிவுரையால் சந்தமாமா- விஜயா கம்பைன்ஸ் தயாரித்த பிருந்தாவனம், பைரவ தீபம், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன விஜயம் போன்ற சினிமாக்களை ராவி கொண்டல ராவின் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தில் பூர்த்தி செய்தனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அண்மையில் மிகவும் சிரமத்தில் இருந்த ராவி கொண்டல் ராவுக்கு நடிகர் சிரஞ்சீவி பொருளாதார உதவி புரிந்துள்ளார். திரைத்துறையினரும் பல பிரமுகர்களும் ராவிகொண்டல் ராவின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img