ஏப்ரல் 21, 2021, 10:27 காலை புதன்கிழமை
More

  தமிழகத்தில் பரவலாக மழை; கொட்டிய மழையில் மிதக்கும் சென்னை!

  திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

  chennai rain - 1

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்று முதலே பல இடங்களில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன 

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்ப, நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

  செவ்வாய்க்கிழமை நேற்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.  

  சென்னையில் கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், கோட்டூர்புரம், அடையாறு, பெசன்ட் நகர், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல் , கிண்டி, வேளச்சேரி, போரூர், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

  மதுரை நகரில் அதிகாலையில் கன மழை கொட்டித் தீர்த்தது. மதுரை நகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

  rain madurai - 2

  மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், வண்டியூர், கோரிப்பாளையம், கே.கே.நகர், மேலமடை, மதிச்சியம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ததது. இதனால் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இங்கு பகலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

  திருச்சி மாவட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம்,  லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது! 

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வரம்பியம், கச்சனம், ஆலத்தம்பாடி, வேளூர், பல்லங்கோவில், கட்டிமேடு, ஆதிரெங்கம் விட்டுகட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

  நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, திருக்குவளை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகள், மீனம்மநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

  ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, சுற்று வட்டாரப் பகுதிகளான கோபி, பெருந்துறை, பவானி, கொடுமுடி, கவுந்தபாடி, எலந்தகுட்டை, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

  திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் கோதையார், பேச்சிப்பாறை, கடையால், குலசேகரம், குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கன மழை பெய்தது. 

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »