ஏப்ரல் 21, 2021, 11:19 காலை புதன்கிழமை
More

  ரஜினி இபாஸ் குறித்து… சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; 95 சதவீதம் பேர் வரை முகக் கவசம் அணிகின்றனர்..

  prakash
  prakash

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த தந்தை-மகன் உயிரிழப்பு விவகாரத்தில் எந்த அரசு அல்லது அரசியல் பொறுப்பிலும் இல்லாத திமுகவின்  அமைப்பு பொறுப்பில் மட்டுமே உள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை வந்து சென்றபோது, இ-பாஸ் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 

  இந்நிலையில் ரஜினி மீது அரசியல் ரீதியாக குறிவைத்து, ரஜினி இபாஸ் பெற்று செங்கல்பட்டு மாவட்டம் கொட்டிவாக்கம் பகுதிக்கு சென்று வந்தாரா  என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. தொடர்ந்து ரஜினியின் இபாஸ் குறித்த தனிப்பட்ட தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டன.அதில் எந்த வாகனத்துக்கு அவர் இ பாஸ் பெற்றார் என்றும் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.  

  இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று சில விளக்கங்களை அளித்தார் அப்போது அவர், ‘இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘இ – பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ‘இ – பாஸ்’ பெற்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ‘இ – பாஸ்’ பெற்று காரில் பயணம் செய்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்று கூறினார்

  சென்னையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் நேற்று துவக்கி வைத்தார்.

  அதன்பின் அவர் கூறுகையில், சென்னையில் தினமும் 12 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 23 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைந்துள்ளனர். வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது யாருக்காவது மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  அதன்பின் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு களப்பணியாளர்கள் வாயிலாக கண்டறியப்படும் 20 பேர் வரை தினமும் மருத்துவமனைகளில் அனுமதித்து வருகிறோம். இதற்காக அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  இதுபோன்ற நடவடிக்கையால்தான் 0.3 சதவீதம் வரை இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; 95 சதவீதம் பேர் வரை முகக் கவசம் அணிகின்றனர்…என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »