முருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…

Published:

மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகிழ் திருமேனி, பேரரசு, கௌதம் மேனன், அருண்ராஜா காமராஜா உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர் அடிபட்டது. அதன்பின் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சன் பெயர் அடிபட்டது. நெல்சன் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், டாக்டர் படத்தை முடித்து விஜய் படத்திற்கு அவர் இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இடையில் எஸ்.ஜே.சூர்யா கதை விஜய்க்குபிடித்துப்போனதாகவும், விஜயின் 65வது படத்தை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே யார் இயக்குனர் என்பது தெரியவரும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img