பத்மபூஷன் விருதை திருப்பி கொடுக்க போகிறாரா இளையராஜா?

சினி நியூஸ் சினிமா
iliyaraja
iliyaraja

இசைக்காக வாழ்ந்துவரும் இளையராஜா குறித்து தவறாக கூறுவது வேதனை அளிக்கிறது என்று இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசை பணியை மேற்கொண்டு வந்த நிலையில், ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலி செய்ய பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இளையராஜா ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றால் ஸ்டூடியோவில் பொருட்களை எடுக்க அனுமதி அளிப்பதாக பிரசாத் ஸ்டூடியோ அறிவித்தது.

இதை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜா தனது பொருட்களை எடுக்க இருந்த நிலையில் அவர் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

dheena
dheena

அவரின் பொருட்கள் இருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் குப்பை போல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இளையராஜா குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “பிரசாத் ஸ்டூடியோவில் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல்; இசைக்காக வாழ்ந்துவரும் அவரைப்பற்றி தவறாக கூறுவது வேதனை அளிக்கிறது. பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இருப்பதாக இளையராஜா கூறியிருக்கிறார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.