
ஜனவரி 14, 2021 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் காரை ஓட்டிச் சென்றார்.
இந்த விவகாரம் விமான நிலைய அதிகாரிகளை அதிர்சசிக்கு உள்ளாக்கி உள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உலகின் டாப்10 புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் பலத்த பாதுகாப்புகளையும் மீறி விமான நிலைய ஓடுபாதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
கோங்ஸாக் என்பவர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோவில், காரை ஓட்டி வந்த நபர் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தும் முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர். காரையும் உடனடியாக பறிமுதல் செய்துவிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரின் காரில் இருந்து மதுபாட்டில், போதைப்பொருளையும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தல், சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருத்தல், மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போதை ஆசாமியை கைது செய்துள்ளனர்.

இப்படி போதை ஆசாமி விமான நிலைய ஓடுபாதையில காரை ஒட்டி உள்ளே வருது முதல்முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் குடிபோதையில் இருந்த நபர், ஒருவர் காதலுக்காக உள்ளே புகுந்தார். அவரை கைது செய்தனர்.
งามไส้ บริษัทหมื่นล้าน AOT ปล่อยให้ รถ ที่ไม่ได้รับอนุญาต
— คนไทยไม่ยอม YNWA (@Khongsak) January 14, 2021
บุกเข้าไปวิ่งพล่านข้างเครื่องบิน
นี่คือ safety & security breach ที่ร้ายแรงมากครับ #สาระการบินน่ารู้ pic.twitter.com/MwkPNHawDe