பிக்பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டியும்.. வைரலாகும் படுக்கையறை புகைப்படம்!

சினி நியூஸ் சினிமா
dharshan - 2026

நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

dharshan 5 - 2026

இந்த விஷயம் அண்மையில் சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த போது தெரியவந்தது. நிச்சயதார்த்தம் நடைபெற்ற போட்டோக்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தான் நடிகை என்பதால் தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

dharshan 3 - 2026

மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை இணைத்து அவர்களுடன் தவறான தொடர்பு இருப்பதாகவும் நடிகை சனம் ஷெட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சனம் ஷெட்டிதான் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார் என்றார்.

dharshan 1 - 2026

மேலும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சனம் ஷெட்டி, தனது முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டியில் பங்கேற்றிருந்ததாகவும் தெரிவித்தார். சனம் ஷெட்டி பிகினி போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதோடு தன்னை வைத்து படம் தயாரிக்க இருந்த தயாரிப்பாளர்களிடம் தன்னைப் பற்றி தவறாக பேசி தனக்கு வந்த வாய்ப்புகளை கெடுத்ததாகவும் கூறினார்.

dharshan 4 - 2026

இதனாலேயே அவரை பிரிய முடிவு செய்ததாகவும் கூறிய தர்ஷன், இனிமேல் சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி குறித்த பிரச்சனையே பெரும் பேச்சாக உள்ளது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

dharshan 2 - 2026

சனம் ஷெட்டியும் தர்ஷனும் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் போட்டோ பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஷெரினுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் தர்ஷன். ஷெரினை மடியில் உட்கார வைத்து கொஞ்சி சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.