
கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21ல் தீபாவளி க்கு வெளியாகிறது.
இந்தப் படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார். சர்தார் படத்தை விஷாலின் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
டாக்டர், டான் தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு பிரின்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் பிரின்ஸ் என அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுவருகிறது.
தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கில நடிகை நடித்துவருகிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயன் கதாநாயகிக்கு திருக்குறள் கற்பிப்பது போல உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகிவருகிறது.