பிரபல நடிகரின் காதலை இரண்டு முறை மறுத்த காஜல் அகர்வால்

சினி நியூஸ் சினிமா

kajal navdeep - 2026பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் காஜல் அகர்வால் பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் இரண்டு முறை காதல் புரபோஸ் செய்ததாகவும், அந்த காதலை தான் நிராகரித்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காஜல் அகர்வாலிடம் காதலை கூறிய அந்த நடிகர் நவ்தீப். இவர் தமிழில் அறிந்தும் அறியாமலும், இது என்ன மாயம் உள்பட ஒருசில படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரபல தெலுங்கு நடிகர்கள் குறித்து கருத்து கூறிய காஜல் அகர்வால், மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர் என்றும் ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும் என்றும் கூறினார். அதேபோல்
அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார் என்றும் ஹீரோக்களிலேயே ரொமாண்டிக்காக இருப்பவர் சிரஞ்சீவி மட்டுமே என்றும் கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ் என்ற தமிழ்ப்படத்திலும், 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.