தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறாரா வடிவேலு?

Published:

pulikesi - 2026பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2′ என்ற படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டதாக வடிவேலு அறிவித்தது படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஷங்கரின் தரப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கவே வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு விரிவான பதில் அளித்த வடிவேலு, தான் தற்போது வேறு சில படங்களில் கமிட் ஆகியிருப்பதால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2′ படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்

இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img