December 5, 2025, 3:21 PM
27.9 C
Chennai

Tag: வடிவேலு

செப்டம்பர் இறுதிக்குள் நடிக்க வருவேன்! வடிவேலு!

தான் மீண்டும் நடிக்க வரவுள்ளதாக காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா காமெடி நடிகர்களிளல் வடிவேலு மிக முக்கியமானவர். இன்றையக்கு வடிவேலுவை தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் மீம்ஸ்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது ஒரு காலத்தில் வடிவேலு அனைத்துப் படங்களிலும் இருந்தார். பெரிய நடிகர்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் தனது பட வேலைகளை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். கடந்த 8 வருடத்தில் அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன.24ம் புலிகேசி, பேய் மாமா உள்பட சமீபத்தில் அவர் ஒப்பந்தமான எல்லாப் படங்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் தான் திரும்பவும் நடிக்க வரப்போவதாக வடிவேலு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான என்ட்ரியாக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

மீம்ஸ் ஹீரோ வடிவேலு.. இது வெறும் பேரு இல்ல… வாழ்வியல் தத்துவம்!

மற்றவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைப்பது என்பது இயற்கையின் மிகப்பெரிய அருட் கொடை.. அந்த வரத்தைப் பெற்ற, ஒன் அண்ட் ஒன்லி மீம்ஸ் ஹீரோ வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறாரா வடிவேலு?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' என்ற படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டதாக வடிவேலு அறிவித்தது...