சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் டைட்டில் , ஃபர்ஸ்ட்லும் மோஷன் போஸ்டர் வெளியீடு

சினி நியூஸ் சினிமா

kana - 2026தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் முதன்முதலில் தயாரிக்கும் படத்தை அவருடைய நண்பரும், பாடலாசிரியர் பாடகருமான அருண்காமராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தந்தை-மகளாக நடித்து வரும் இந்த படம் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘கனா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.