maari22 - 2026பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சாய்பல்லவி, தமிழில் நடித்த முதல்படமான ‘தியா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே. என்ற படத்திலும் தனுஷூடன் மாரி 2’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ‘மாரி 2’ படத்தில் சாய்பல்லவியின் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தனுஷூக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டும் டிரைவர் கேரக்டரில் சாய்பல்லவி நடித்து வருகிறாராம். இந்த கேரக்டர் படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்றும், இந்த படத்திற்கு பின்னர் சாய்பல்லவியின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்றூம் கூறப்படுகிறது.

மாரி படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் , தனுஷின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending